TNPSC Thervupettagam

இந்திய ரயில்வே: ஹெட் ஆன் ஜெனரேஷன் (HOG) தொழில்நுட்பம்

September 19 , 2019 2133 days 794 0
  • இந்த ஆண்டுக்குள் அனைத்து எல்.எச்.பி கோச் (Linke-Hofmann-Busch coach) ரயில்களிலும் ஹெட் ஆன் ஜெனரேஷன் தொழில்நுட்பத்தைப்  பின்பற்ற ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
  • இன்று வரை 342 ரயில்கள் ஏற்கனவே HOG ஆக மாற்றப் பட்டுள்ளன.
  • மின்சாரத்தின் விலை ஒரு  யூனிட்டுக்கு ₹ 22 என்ற விலையில் இயங்கும் என்ட்-ஆன்-ஜெனரேஷன் (EOG) முறையுடன் ஒப்பிடும் போது புதிய தொழில்நுட்பமான  HOG ஆனது ஒரு யூனிட் ₹ 6 என்ற விலையில் கிடைக்கும்.
எப்படி இது செயல்படுகிறது?
  • HOG தொழில்நுட்பத்தில், மேல்நிலை மின்சார விநியோகத்திலிருந்து மின்சாரம் எடுக்கப் படும்.
  • பெரிய சத்தம் மற்றும் புகைகளை வெளியேற்றும் ஆற்றல்  ஜெனரேட்டர் கார்கள் இனி அதில் இருக்காது.
  • அத்தகைய இரண்டு ஜெனரேட்டர் கார்களுக்குப் பதிலாக
    • ஒரு அமைதியான காத்திருப்பு ஜெனரேட்டர் கார் அவசரநிலைக்கு பயன்படுத்தப் படும்.
    • மற்ற காரில் முழு ரயிலிலும் பயன்படுத்தப்பட வேண்டிய மேல்நிலை விநியோகத்திலிருந்து சக்தியை மாற்றும் திறன் இருக்கும்.
       

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்