இந்திய ரயில்வே: ஹெட் ஆன் ஜெனரேஷன் (HOG) தொழில்நுட்பம்
September 19 , 2019 2146 days 804 0
இந்த ஆண்டுக்குள் அனைத்து எல்.எச்.பி கோச் (Linke-Hofmann-Busch coach) ரயில்களிலும் ஹெட் ஆன் ஜெனரேஷன் தொழில்நுட்பத்தைப் பின்பற்ற ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இன்று வரை 342 ரயில்கள் ஏற்கனவே HOG ஆக மாற்றப் பட்டுள்ளன.
மின்சாரத்தின் விலை ஒரு யூனிட்டுக்கு ₹ 22 என்ற விலையில் இயங்கும் என்ட்-ஆன்-ஜெனரேஷன் (EOG) முறையுடன் ஒப்பிடும் போது புதிய தொழில்நுட்பமான HOG ஆனது ஒரு யூனிட் ₹ 6 என்ற விலையில் கிடைக்கும்.
எப்படி இது செயல்படுகிறது?
HOG தொழில்நுட்பத்தில், மேல்நிலை மின்சார விநியோகத்திலிருந்து மின்சாரம் எடுக்கப் படும்.
பெரிய சத்தம் மற்றும் புகைகளை வெளியேற்றும் ஆற்றல் ஜெனரேட்டர் கார்கள் இனி அதில் இருக்காது.
அத்தகைய இரண்டு ஜெனரேட்டர் கார்களுக்குப் பதிலாக
ஒரு அமைதியான காத்திருப்பு ஜெனரேட்டர் கார் அவசரநிலைக்கு பயன்படுத்தப் படும்.
மற்ற காரில் முழு ரயிலிலும் பயன்படுத்தப்பட வேண்டிய மேல்நிலை விநியோகத்திலிருந்து சக்தியை மாற்றும் திறன் இருக்கும்.