மத்திய ரயில்வே அமைச்சர் ரயில் தொழில்நுட்பக் கொள்கை 2026, ரயில் தொழில்நுட்ப தளம் மற்றும் மின்னணு -ரயில்வே உரிமைகோரல் தீர்ப்பாயம் (e-RCT) ஆகியவற்றைப் புதுதில்லியில் தொடங்கி வைத்தார்.
ரயில் தொழில்நுட்பக் கொள்கை 2026, இந்திய ரயில்வே முழுவதும் நவீன தொழில் நுட்பத்தை பெரிய அளவில் ஏற்றுக்கொள்வதை ஊக்குவிக்கிறது.
இது செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தரவு சார்ந்தத் தீர்வுகள் மூலம் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
யானை நடமாட்டம் கண்டறிதல், ரயில் பெட்டிகளில் தீ கண்டறிதல், ட்ரோன் அடிப்படையிலான தண்டவாள ஆய்வு மற்றும் மூடுபனியில் தடைகளைக் கண்டறிதல் ஆகியவை AI அமைப்புகளில் அடங்கும்.
ரயில் தொழில்நுட்ப தளமானது, புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் புத்தாக்குநர்கள் ரயில்வே துறைகளிடம் முன்மொழிவுகள் மற்றும் சோதனைத் திட்டங்களைச் சமர்ப்பிக்க அனுமதிக்கிறது.
மின்னணு-ரயில்வே உரிமை கோரல் தீர்ப்பாயம், ஆன்லைன் வழியிலான வழக்குத் தாக்கல், கண்காணிப்பு மற்றும் விரைவான தீர்ப்பை வழங்குகிறது என்ற நிலையில் 23 தீர்ப்பாயங்களையும் 12 மாதங்களுக்குள் டிஜிட்டல் மயமாக்குகிறது.
இந்தச் சீர்திருத்தங்கள், செயல்பாடுகளை நவீனமயமாக்குவதற்கும் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துவதற்கும் 52 வாரங்களில் சுமார் 52 சீர்திருத்தங்களை மேற் கொள்ளும் இந்திய ரயில்வேயின் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.