பழங்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக இந்திய ரயில்வேயானது பிரத்தியேகமான ஒரு வாழை கொள்கலன் ரயிலை அறிமுகப் படுத்தியுள்ளது.
ஆந்திராவின் ததிபாத்ரி ரயில் நிலையத்திலிருந்து 980 மெட்ரிக் டன் எடை கொண்ட வாழைப் பழங்களை மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகத்திற்கு ஏற்றிச் சென்ற முதல் “பழ ரயில்” இதுவாகும்.
இந்த வாழைப் பழங்கள் ‘ஹேப்பி பனானாஸ்’ என்ற குறியீட்டுப் பெயரில் ஏற்றுமதி செய்யப் படுகின்றன.
இந்திய ரயில்வேயானது சமீபத்தில் டெல்லி சப்தர்ஜங் ரயில் நிலையத்தில் அதிகத் திறன் கொண்ட சரக்கு ரயில் பெட்டிகளை அறிமுகப் படுத்தியது.
இந்தப் புதிய சரக்கு ரயில் பெட்டிகள் கபுர்தலா ரயில் பெட்டித் தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்டுத் தயாரிக்கப் பட்டன.
லிங்கே ஹாஃப்மேன் புஷ் என்ற வகையைச் சேர்ந்த ரயில் பெட்டிகளில் இது முதலாவது வகையாகும்.