இந்திய ரிசர்வ் வங்கியின் 5 பில்லியன் டாலர் ரூபாய் மதிப்புமாற்று ஏலம்
February 4 , 2025 244 days 248 0
இந்த மதிப்புமாற்று ஏலம் ஆனது, வங்கி அமைப்பில் சுமார் 1.50 லட்சம் கோடி ரூபாய் அளவில் ரூபாய் மதிப்பிலானப் பணப்புழக்கத்தினை உட்செலுத்துவதற்கான மத்திய வங்கியின் சமீபத்திய நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்.
இந்திய ரிசர்வ் வங்கியானது அறிவிக்கப்பட்ட 5 பில்லியன் டாலர் தொகைக்கு எதிராக, ஏலத்தில் 253 பங்கேற்பாளர்களிடமிருந்து சுமார் 25.59 பில்லியன் டாலர் மதிப்பில் ஏல கோரிக்கைகளைப் பெற்றது.
இதில் ஏலத்தினைக் கைப்பற்றிய ஏலதாரர்களின் நடப்புக் கணக்குகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி ரூபாய் மதிப்பிலான நிதியை வரவு வைக்கும்.
இப்பரிமாற்றப் பரிவர்த்தனையின் மறுபகுதியில், அமெரிக்க டாலர்களைத் திரும்பப் பெறுவதற்காக வேண்டி ஆறு மாதங்களுக்குப் பிறகு ரூபாய் மதிப்பிலான நிதிகள் மதிப்பு மாற்றத் தவணைகளுடன் இந்திய ரிசர்வ் வங்கிக்குத் திருப்பி அனுப்பப்படும்.