இந்திய ரிசர்வ் வங்கியின் உலகளாவிய தங்கம் கொள்முதல் 2024
December 12 , 2024 298 days 259 0
அக்டோபர் மாதத்தில் சர்வதேச மத்திய வங்கிகள் வாங்கிய தங்கத்தில் சுமார் 48% தங்கத்தினை இந்திய ரிசர்வ் வங்கி வாங்கியுள்ளது.
இது அதன் இருப்புகளில் மேலும் சுமார் 27 டன்களைச் சேர்த்துள்ளதோடு இதன் மூலம் மொத்த தங்க இருப்பின் அளவு 882 டன்னாக உயர்ந்துள்ளது.
அக்டோபர் மாதத்தில் அனைத்து மத்திய வங்கிகளின் தங்க கொள்முதல் மொத்தமாக 60 டன் ஆகும்.
ஜனவரி மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில், மத்திய வங்கி சுமார் 24 டன் தங்கத்தினை வாங்கியுள்ள நிலையில் இதனால் மொத்த தங்க இருப்பு 854.73 டன்னாக உயர்ந்தது.
தங்கத்தினை மிக அதிகளவில் வாங்கிய இரண்டாவது மத்திய வங்கி இந்திய ரிசர்வ் வங்கியாகும்.