TNPSC Thervupettagam

இந்திய ரிசர்வ் வங்கியின் 'கில் ஸ்விட்ச்' வசதி

June 3 , 2026 11 days 107 0
  • டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வழிகளுக்கான உலகளாவிய 'கில் ஸ்விட்ச்' பொறிமுறை மற்றும் 'செயல்படுத்து/நிறுத்து' வசதியை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆராய்ந்து வருகிறது.
  • 'கில் ஸ்விட்ச்' என்பது மோசடி நடப்பதாகச் சந்தேகிக்கப்படும் போது, வங்கிக் கணக்கு அல்லது டிஜிட்டல் பணப்பை/வாலட்டில் இருந்து அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளையும் உடனடியாக முடக்கும் ஒரு அவசரகாலப் பாதுகாப்பு அம்சமாகும்.
  • முன்மொழியப்பட்டுள்ள இந்த வசதியானது UPI, IMPS, NEFT, இணைய வங்கிச் சேவை மற்றும் டிஜிட்டல் பணப்பை/வாலட்டுகளை உள்ளடக்கியதாக இருக்கும்.
  • அலைபேசி வங்கிச் செயலிகள், குறுஞ்செய்தி (SMS), IVR (ஊடாடும் குரல் வழிப் பதில் அமைப்பு) அல்லது இணைய முகப்புகள் மூலமாக பயனர்கள் இந்த அம்சத்தை செயல் படுத்த முடியும்.
  • இணைய மோசடிகளுக்கு எதிரான பாதுகாப்பை வலுப்படுத்துவது மற்றும் இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைச் சூழலமைப்பின் பாதுகாப்பை மேம்படுத்துவது ஆகியவற்றை இந்த முன்னெடுப்பின் நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்