இந்திய ரிசர்வ் வங்கி ஆனது, இந்திய வங்கி முறையை உலகளாவிய தரநிலைகளுக்கு இணையாக மாற்றுவதற்காக 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 01 ஆம் தேதியன்று நான்கு முக்கிய சீர்திருத்தங்களை அறிவித்தது.
ரிசர்வ் வங்கியானது இடர் அடிப்படையிலான வைப்புக் காப்பீட்டுத் தவணைகளை அறிமுகப் படுத்தும்.
இதன் கீழ், சிறந்த இடர் மேலாண்மைகளைக் கொண்ட வங்கிகள் ஆனது, வைப்புத் தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகத்திற்கு (DICGC) குறைந்த விகிதங்களில் செலுத்துகின்றன.
எதிர்பார்க்கப்படும் கடன் இழப்பு (ECL) மாதிரியானது, வணிக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 முதல் 2031 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரையில் படிப்படியான அமலாக்கத்துடன் பொருந்தும்.
திருத்தப்பட்ட பேசல் III மூலதன விதிமுறைகள் ஆனது கடன் வழங்கீடு மற்றும் துறைசார் மீள்தன்மையை வலுப்படுத்தி, குறு, சிறு மற்று நடுத்தரத் தொழில்துறை நிறுவனங்கள் (MSME) மற்றும் வீட்டுக் கடன்களின் இடர் உண்டாக்கும் விகிதங்களைக் குறைக்கும்.
இந்திய ரிசர்வ் வங்கியானது, புதிய முதலீடு மற்றும் வணிக வழிகாட்டுதல்களை செயல்படுத்தி, குழு நிறுவனங்களுடன் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய வணிகம் மீதான கட்டுப்பாடுகளை நீக்கி, வாரியங்களுக்கு அதிக முடிவெடுக்கும் அதிகாரத்தை வழங்கும்.