TNPSC Thervupettagam

இந்திய ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் பண வழங்கீட்டு முன்னெடுப்புகள்

October 18 , 2025 13 days 41 0
  • உலகளாவிய நிதி சார் தொழில்நுட்ப நிறுவனங்கள் விழாவில் இந்திய ரிசர்வ் வங்கியானது நான்கு புதிய பண வழங்கீட்டு முன்னெடுப்புகளை அறிமுகப் படுத்தி உள்ளது.
  • இந்த முன்னெடுப்புகளில், பண வழங்கீட்டு உதவி மற்றும் தகராறு தீர்வுக்கான செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ஒருங்கிணைந்த பண வழங்கீட்டு இடைமுக உதவி அடங்கும்.
  • இணைய உலக இணைப்பிலான அமைப்புகள் மூலமான கட்டணங்கள் ஆனது கார்கள் மற்றும் திறன்மிகு தொலைக்காட்சிப் பெட்டிகள் போன்ற இணைக்கப்பட்ட சாதனங்களிலிருந்து பரிவர்த்தனைகளை செயல்படுத்துகின்றன.
  • பேங்கிங் கனெக்ட் நிறுவனமானது தடையற்ற கட்டணங்கள் மற்றும் வணிகர்களை இணைத்தல் ஆகியவற்றிற்கு ஒன்றோடொன்று இணைந்து இயங்கக்கூடிய இணைய வங்கியை வழங்குகிறது.
  • UPI ரிசர்வ் பே வசதியானது பயனர்கள் கடன் வரம்புகளை குறிப்பிட்ட நோக்கங்களுக்காக பாதுகாப்பாக நிர்வகிக்க அனுமதிக்கிறது.
  • இந்த நடவடிக்கைகள் வாடிக்கையாளர் வசதியை மேம்படுத்துவதையும் இந்தியாவில் டிஜிட்டல் கட்டணங்களை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்