இந்திய ரிசர்வ் வங்கியின் நேரடி சில்லறை வியாபாரத் திட்டம்
July 23 , 2021 1571 days 646 0
அரசுப் பத்திரங்களில் தனியார் முதலீட்டாளர்களின் முதலீடுகளை அதிகரிக்கச் செய்வதற்கு வேண்டி இந்திய ரிசர்வ் வங்கியின் நேரடி சில்லறை வியாபாரத் திட்டம் ஒரு தீர்வாகும்.
சில்லறை வியாபார முதலீட்டாளர்களுக்கு அரசுப் பத்திரங்களை மேலாண்மை செய்வதற்கான ‘கில்ட்’ எனும் கணக்கை ஆரம்பித்து உபயோகிப்பதற்கான வசதிகள் செய்து தரப்படும்.
அரசுப் பத்திரங்களில் சில்லறை வியாபாரத்தின் பங்கேற்பினை அதிகரிக்கும் தொடர் முயற்சியின் ஓர் அங்கமாக இந்த வசதியானது தொடங்கப்பட்டுள்ளது.
இது சில்லறை வியாபார முதலீட்டாளர்களைமுதன்மை மற்றும் இரண்டாம் நிலை அரசுப் பத்திரச் சந்தைகளை இணையம் வாயிலாக எளிதில் அணுகச் செய்யும் வசதியை மேம்படுத்துவதற்காகத் தொடங்கப்பட்டுள்ளது.