இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியத்தின் இயக்குநர்
February 25 , 2022 1267 days 654 0
நிதித் துறை அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறையின் செயலாளர் சஞ்சய் மல்ஹோத்ராவினை இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியத்தின் இயக்குநராக மத்திய அரசு நியமித்துள்ளது.
நிதிச் சேவைகள் துறையின் செயலாளராக நியமிக்கப் படுவதற்கு முன்பு, மல்ஹோத்ரா REC லிமிடெட் என்ற நிறுவனத்தின் தலைவராகவும் அதன் மேலாண்மை இயக்குநராகவும் பணியாற்றினார்.
இவர் தேபாசிஷ் பாண்டா என்பவரையடுத்து இந்தப் பொறுப்பினை ஏற்றுள்ளார்.