இந்திய ரிசர்வ் வங்கியின் வருடாந்திர அறிக்கை 2024–25
June 8 , 2025 3 hrs 0 min 14 0
2024-25 ஆம் ஆண்டில், இந்திய ரிசர்வ் வங்கியின் இருப்புநிலை மதிப்பு ஆனது சுமார் 8.2 சதவீதம் அதிகரித்து 76.25 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
2024 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி நிலவரப் படி இந்திய ரிசர்வ் வங்கியின் இருப்பு நிலை மதிப்பு 70.48 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
2024-25 ஆம் ஆண்டில், அதன் வருமானம் 22.77 சதவீதம் அதிகரித்து 3.38 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது என்பதோடு இது 2023-24 ஆம் ஆண்டில் 2.76 லட்சம் கோடி ரூபாய என்ற அளவில் இருந்தது.
இதில் செலவினமானது 7.76 சதவீதம் அதிகரித்து 69,714.02 கோடி ரூபாயாக இருந்தது என்பதோடு இது 2024 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி சுமார் 64,694.33 கோடி ரூபாயாக இருந்தது.
2024-25 ஆம் ஆண்டில், வெளிநாட்டு மூலங்களிலிருந்துப் பெறப்பட்ட வருவாய் சுமார் 38.07 சதவீதம் அதிகரித்து 2.59 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
2025 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி நிலவரப் படி, இந்திய ரிசர்வ் வங்கியின் மொத்தத் தங்க இருப்பு 879.58 மெட்ரிக் டன்களாக இருந்தது.
2024 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி 2.61 லட்சம் கோடி ரூபாயாக இருந்த இந்திய ரிசர்வ் வங்கியின் 'பிற நிலுவைகள்' ஆனது, 2025 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி நிலவரப் படி 23.31 சதவீதம் அதிகரித்து 3.21 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 2024-25 ஆம் ஆண்டில் 6.5% ஆக மிதமாக உள்ளது.
நிகர குடும்பச் சேமிப்பு, மொத்தத் தேசியச் செலவின வருமானத்தில் (GNDI) 5.1% ஆக அதிகரித்துள்ளது.
2024-25 ஆம் ஆண்டில் டிஜிட்டல்வழி பணம் செலுத்தும் அளவு ரீதியாக 34.8 சதவீதமும், மதிப்பு ரீதியாக 17.9 சதவீதமும் அதிகரித்துள்ளது.
மத்திய அரசின் மொத்த நிதிப் பற்றாக்குறை (GFD) 2023-24 ஆம் ஆண்டில் 5.5% ஆக இருந்தது என்பதோடு இது 2024-25 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.7% ஆகக் குறைந்தது.
200 மற்றும் 500 ரூபாய் தாள்களின் கள்ள நோட்டு மதிப்பு முறையே 13.9% மற்றும் 37.3% அதிகரித்துள்ளது.