TNPSC Thervupettagam

இந்திய வடிவமைப்பு ஆணையம்

December 16 , 2019 2070 days 741 0
  • இந்திய வடிவமைப்பு ஆணையமானது (India Design Council - IDC) இந்தியாவின் பட்டய வடிவமைப்புகள் மற்றும் வடிவமைப்பு தொடர்பான கல்வி தரக் குறி ஆகியவற்றை புது தில்லியில் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • IDC மற்றும் அகமதாபாத்தில் உள்ள தேசிய வடிவமைப்பு நிறுவனம் ஆகியவற்றின் இந்த இரண்டு முயற்சிகள் பின்வரும் சவால்களை எதிர்கொள்ள உதவும்.
    • வடிவமைப்பின் தரம்,
    • வடிவமைப்பிற்கான கல்வியின் தரம்,
    • தொழில்துறையில் வடிவமைப்பிற்கான முன்னுரிமையை உயர்த்துவது மற்றும்
    • பொது நோக்கத்திற்காக வடிவமைத்தல்.
  • இந்திய வடிவமைப்பு ஆணையம் என்பது மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையின் கீழ் நிறுவப்பட்ட இந்திய அரசின் ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.
  • இது வடிவமைப்பிற்கான பல்வேறு ஒழுங்கு அமைப்புகளைக் கொண்ட ஒரு தேசிய மூலோபாய அமைப்பாகும். மேலும் இந்த ஆணையமானது இந்தியாவை வடிவமைப்புத் துறையில் சிறந்த நாடாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்