மத்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகமானது இந்திய வனச் சட்டம், 1927-ல் விரிவான திருத்தங்களை மேற்கொள்வதற்கான முதலாவது வரைவினை இறுதி செய்துள்ளது.
அந்த அமைச்சகத்தினால் அமைக்கப்பட்ட ஒரு தனிக்குழு அளித்துள்ள அறிக்கைகளின் அடிப்படையில் இந்த வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்தத் திருத்தங்களானது வன உரிமைகள் சட்டம், 2006-லிலும் திருத்தங்கள் மேற்கொள்கிறது.
மேலும் இது வளர்ப்புக் காடுகள் என்ற ஒரு புதிய பிரிவையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் திருத்தங்களானது பின்வருவனவற்றின் மீது அதிகமான கவனத்தைச் செலுத்துகிறது.
காட்டு வளங்களின் பாதுகாப்பு, செறிவூட்டல் மற்றும் நீடித்த நிலையான மேலாண்மை.
சுற்றுச்சூழல் நிலைப்புத் தன்மையைப் பாதுகாப்பது தொடர்பான விவரங்கள்.