2014 ஆம் ஆண்டில் 15.5 லட்சமாக இருந்த காசநோயாளிகள் பதிவானது, 2022 ஆம் ஆண்டில் 56 சதவீதம் உயர்ந்து 24.22 லட்சமாக உள்ளது.
2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இன்று வரையில், இந்தியாவில் காசநோய் சிகிச்சை பெறும் 79 லட்சத்துக்கும் அதிகமான நபர்களுக்கு நேரடிப் பயன் பரிமாற்றம் மூலம் சுமார் 2,102 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2015 ஆம் ஆண்டில் 1.49 லட்சமாக இருந்த மருந்து எதிர்ப்புத் திறன் கொண்ட காசநோய் பாதிப்பின் எண்ணிக்கையானது 2021 ஆம் ஆண்டில் 1.19 லட்சம் என்ற அளவிற்குக் குறைந்துள்ளது.
2022 ஆம் ஆண்டு உலக காசநோய் அறிக்கையின் படி, இந்தியாவில் 2015 ஆம் ஆண்டில் லட்சத்திற்கு 256 ஆக இருந்த காசநோய்ப் பாதிப்பு ஆனது 2021 ஆம் ஆண்டில் 18% குறைந்து லட்சத்திற்கு 210 பாதிப்புகளாகக் குறைந்துள்ளது.
இது உலகளாவிய சராசரியான 11% குறைப்பை விட 7 சதவீதம் சிறப்பாகும்.