இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 150வது ஆண்டு நிறைவு
January 20 , 2024 485 days 460 0
இந்திய வானிலை ஆய்வுத் துறை நிறுவப்பட்டதன் 150வது ஆண்டு நிறைவினை முன்னிட்டுப் பல்வேறு முன்னெடுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
பருவநிலைக் கண்காணிப்பு மூலம் முக்கியமான துறைகளைப் பாதுகாப்பதற்காக தேசியப் பருவநிலை சேவைகள் (NFCS) கட்டமைப்பை IMD அறிமுகப்படுத்தியுள்ளது.
பஞ்சாயத்து அளவில் வானிலை குறித்த முன்னறிவிப்புகளை வழங்குவதற்காக நாடு தழுவிய பஞ்சாயத்து மௌசம் சேவா எனப்படும் சேவையை இது அறிமுகப் படுத்தி உள்ளது.
கைபேசி செயலி மற்றும் முடிவெடுத்தலுக்கான தகவல் வழங்கீட்டு அமைப்பு (DSS) போன்ற முன்னெடுப்புகள் மூலம் வானிலைத் தகவல்களை ஒவ்வொரு வீட்டையும் சென்றடைவதை IMD நோக்கமாகக் கொண்டுள்ளது.