TNPSC Thervupettagam

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 151வது ஸ்தாபன தினம்

January 19 , 2026 2 days 36 0
  • இந்தியா ஜனவரி 15, 2026 அன்று இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) 151வது ஸ்தாபன தினத்தைக் கொண்டாடியது.
  • இது முக்கிய நகரங்களில் 200 தானியங்கி வானிலை நிலையங்களை (AWS) நிறுவியது.
  • தானியங்கி வானிலை நிலையங்கள் (AWS) அதிக துல்லியம் மற்றும் அதிர்வெண்ணுடன் வானிலைத் தரவை தானாகவே பதிவு செய்து அனுப்புகின்றன.
  • நகர்ப்புற மற்றும் குறிப்பிட்டப் பகுதியின் வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்துவதற்காக டெல்லி, மும்பை, சென்னை மற்றும் புனேவில் புதிய AWS பயன்படுத்தப் பட்டன.
  • IMD ஆனது, புவி அறிவியல் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்ற, வானிலை முன்னறிவிப்பு மற்றும் நில அதிர்வு அறிவியலுக்கான இந்தியாவின் முக்கிய நிறுவனம் ஆகும்.
  • அதன் முன்னறிவிப்பின் துல்லியம் சமீபத்திய ஆண்டுகளில் கணிசமாக மேம்பட்டு உள்ளது என்பதோடு பேரிடர் தயார்நிலை மற்றும் முன் எச்சரிக்கை அமைப்புகளை இது வலுப்படுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்