இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 151வது ஸ்தாபன தினம்
January 19 , 2026 95 days 139 0
இந்தியா ஜனவரி 15, 2026 அன்று இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) 151வது ஸ்தாபன தினத்தைக் கொண்டாடியது.
இது முக்கிய நகரங்களில் 200 தானியங்கி வானிலை நிலையங்களை (AWS) நிறுவியது.
தானியங்கி வானிலை நிலையங்கள் (AWS) அதிக துல்லியம் மற்றும் அதிர்வெண்ணுடன் வானிலைத் தரவை தானாகவே பதிவு செய்து அனுப்புகின்றன.
நகர்ப்புற மற்றும் குறிப்பிட்டப் பகுதியின் வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்துவதற்காக டெல்லி, மும்பை, சென்னை மற்றும் புனேவில் புதிய AWS பயன்படுத்தப் பட்டன.
IMD ஆனது, புவி அறிவியல் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்ற, வானிலை முன்னறிவிப்பு மற்றும் நில அதிர்வு அறிவியலுக்கான இந்தியாவின் முக்கிய நிறுவனம் ஆகும்.
அதன் முன்னறிவிப்பின் துல்லியம் சமீபத்திய ஆண்டுகளில் கணிசமாக மேம்பட்டு உள்ளது என்பதோடுபேரிடர் தயார்நிலை மற்றும் முன் எச்சரிக்கை அமைப்புகளை இது வலுப்படுத்துகிறது.