TNPSC Thervupettagam

இந்திய விண்வெளிக் கொள்கை 2023

April 16 , 2023 842 days 358 0
  • பாதுகாப்பு மீதான அமைச்சரவைக் குழுவானது, 2023 ஆம் ஆண்டு இந்திய விண்வெளிக் கொள்கைக்குச் சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தக் கொள்கையானது, இந்திய விண்வெளித் தொழில்நுட்பப் பிரிவின் பொருளாதாரத்தில் ஒரு குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • இது உலகளாவிய விண்வெளித் தொழில்நுட்பப் பிரிவின் பொருளாதாரத்தில் 2 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள இந்தியாவின் பங்கினை 10% ஆக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இஸ்ரோ, NSIL மற்றும் IN-SPACe ஆகியவற்றின் பணிகள் மற்றும் பொறுப்புகளை இந்தக் கொள்கை குறிப்பிடுகின்றது.
  • இஸ்ரோ தனது செயல்திறன்களைப் புதியத் தொழில்நுட்பங்கள், அமைப்புகள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை மேம்படுத்தச் செய்வதில் கவனம் செலுத்தும்.
  • நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (NSIL) நிறுவனமானது, விண்வெளித் துறை தொடர்பான உத்திசார்  நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும்.
  • விண்வெளிப் பொருளாதாரத்தில் தனியார் தொழில்துறையின் பங்களிப்பை மிகவும் அதிகரிக்கச் செய்வதும், இந்தியாவில் தன்னிறைவு மிக்க விண்வெளித் துறையை உருவாக்கச் செய்வதும் NSIL நிறுவனத்தின் ஒரு நோக்கமாகும்.
  • இந்தியத் தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (IN-SPAce) ஆனது, இஸ்ரோ மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கு இடையேயான ஓர் இடைமுகமாகச் செயல்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்