TNPSC Thervupettagam

இந்திய விமான நிலையப் பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம் (திருத்தம்) மசோதா, 2021

August 9 , 2021 1476 days 596 0
  • 2021 ஆம் ஆண்டு இந்திய விமான நிலையப் பொருளாதார ஒழுங்குமுறை ஆணைய (திருத்தம்) மசோதாவினைப் பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
  • இந்த மசோதா தொலைதூரப் பகுதிகளுக்கு விமானச் சேவையினை விரிவுபடுத்துமாறு சிறிய விமான நிலையங்களை ஊக்குவிக்கிறது.
  • 2008 ஆம் ஆண்டு இந்திய விமான நிலையப் பொருளாதார ஒழுங்குமுறை ஆணையச் சட்டத்தின் கீழான பெரிய விமான நிலையம் எனும் வரையறையை மாற்றி அமைத்து 2008 ஆம் ஆண்டு இந்திய விமான நிலையப் பொருளாதார ஒழுங்குமுறை ஆணையச் சட்டத்தை (Airports Economic Regulatory Authority) இம்மசோதா திருத்தி அமைக்க உள்ளது.
  • இந்தத் திருத்தத்தில் 35 லட்சம் வரை வருடாந்திர பயணிகள் போக்குவரத்தைக் கொண்டுள்ள ஒரு விமான நிலையமானது பெரிய விமான நிலையம்’ என்று வரையறுக்கப் பட்டுள்ளது.
  • இதற்கு முன்பு விதிக்கப்பட்டிருந்த பயணிகள் போக்குவரத்து வரம்பானது 15 லட்சம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்