TNPSC Thervupettagam

இந்திய விலக்கு (தவிர்ப்பு) அறிக்கை 2018-19

November 27 , 2019 1996 days 677 0
  • இந்திய விலக்கு (தவிர்ப்பு) அறிக்கையின் படி, வேலைவாய்ப்பு என்று வரும் போது பட்டியல் இனத்தவர், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஆகியோர் மிகவும் விலக்கப்பட்ட உறுப்பினர்களாக உள்ளனர்.
  • தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத் தரவுகளின் பகுப்பாய்வானது சம்பளம் பெறும் வேலைவாய்ப்பு வர்க்கத்தினரிடையே முஸ்லிம்கள் மிகக் குறைவான எண்ணிக்கையைக் கொண்டவர்களாக உள்ளனர் என்பதையும் நாட்டின் சரிந்து வரும் ஒரு மிகப் பெரிய தொழிலாளர் சக்தியாக பெண்கள் உள்ளனர் என்பதையும் காட்டுகின்றது.
  • இந்த வருடாந்திர அறிக்கையானது நடுநிலை ஆய்வு மையத்தினால் (Centre For Equity Studies - CES) வெளியிடப் பட்டுள்ளது.
  • இது மக்கள் தொகையில் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் பொது வேலைவாய்ப்பிலிருந்து விலக்கி வைக்கப் பட்டதையும் அவர்களின் ஓரங்கட்டப்பட்ட நிலையையும் எடுத்துக் காட்டுகின்றது.
  • CES என்பது சமூக நீதி தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஆராய்ச்சி மற்றும் விவாதங்களில் ஈடுபட்டு வரும் ஒரு தன்னாட்சி நிறுவனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்