TNPSC Thervupettagam

இந்திய – ஆஸ்திரேலிய எரிசக்தி பேச்சுவார்த்தை

February 19 , 2022 1250 days 530 0
  • 4வது இந்திய – ஆஸ்திரேலிய எரிசக்தி பேச்சுவார்த்தைக்கு மத்திய ஆற்றல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் R.K. சிங் மற்றும் ஆஸ்திரேலிய எரிசக்தி மற்றும் உமிழ்வு குறைப்பு அமைச்சர் அங்குஸ் டெய்லர் ஆகியோர் தலைமை தாங்கினர்.
  • இந்தப் பேச்சுவார்த்தையில் எரிசக்தி மாற்றம் என்பது பற்றியே பிரதான அம்சமாக விவாதிக்கப் பட்டது.
  • புதுப்பிக்கத்தக்க ஆற்றல், எரிசக்தி செயல்திறன், சேமிப்பு, மின்சார வாகனங்கள், முக்கிய கனிமங்கள், சுரங்கத் துறை போன்றவற்றின் மீதான சிறப்பு கவனத்துடன் தத்தமது நாடுகளின் எரிசக்தி மாற்ற நடவடிக்கைகளைப் பற்றி இரு அமைச்சர்களும் கலந்துரையாடினர்.
  • வளர்ந்து வரும் நாடுகள் தங்களது எரிசக்தி மாற்ற இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு பருவநிலை நிதி அவசியம் என்பது பற்றியும் இந்தியா எடுத்துரைத்தது.
  • புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில் நுட்பங்களின் உற்பத்தி விலையைக் குறைத்தல் மற்றும் உலக உமிழ்வினைக் குறைப்பதற்கு இணங்குதல் ஆகியன குறித்த ஒரு ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன.   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்