இந்திய முதன்மை நிலப்பரப்பில் கடற்கரையின் நிலை குறித்து புவி அறிவியல் துறை அமைச்சகமானது மக்களவையில் தெரிவித்தது.
தேசியக் கடற்கரை ஆராய்ச்சி மையமானது 1990 ஆம் ஆண்டு முதல் தொலை உணர்வு தரவு மற்றும் புவியிடங்காட்டி வரைபடத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் கடற்கரை அரித்தல் நிகழ்வினைக் கண்காணித்து வருகிறது.
இந்தியாவின் 6907.18 கி.மீ. நீள கடற்கரையானது 1990 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையில் மதிப்பிடப் பட்டுள்ளது.
இந்த முதன்மை நிலப் பரப்பில் உள்ள 6907.18 கி.மீ. நீள கடற்கரையில்,
34% பல்வேறு வகை அரித்தல் நிகழ்விற்கு உட்பட்டுள்ளது.
26% ஆனது திரளாகும் தன்மையுடையது.
மீதமுள்ள 40% ஆனது நிலையானதாகவும் உள்ளது.
534.35 கி.மீ. நீள கடற்கரையைக் கொண்ட மேற்கு வங்காள மாநிலத்தில், 1990 முதல் 2018 வரையில் சுமார் 60.5% கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மேற்குக் கடற்கரையில் 592.96கி.மீ. நீள கடற்கரைக் கொண்ட கேரள மாநிலத்தில் 46.4% கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
991.47கி.மீ. நீளமுள்ள தமிழகக் கடற்கரையானது 42.7% கடல் அரிப்பினைச் சந்தித்து உள்ளது.
மிக நீளமான கடற்கரையைக் கொண்ட குஜராத் மாநிலத்தில் 27.06% கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
41.66 கி.மீ. நீளமுள்ளப் புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்தில் 56.2% கடல் அரிப்பு ஏற்பட்டு உள்ளது.