TNPSC Thervupettagam

இந்தியக் கடற்கரையில் உருவாகும் தீவிரப் புயல்கள்

May 18 , 2023 804 days 340 0
  • "வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் வெப்பமண்டலப் புயல்களின் இருப்பு குறித்த நிலையை மாற்றுதல்" என்ற தலைப்பில் சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது.
  • பருவநிலை மாற்றமானது இந்தியக் கடற்கரையின் இருபுறங்களிலும் உருவாகும் சில புயல்களை எவ்வாறு மேலும் தீவிரமடையச் செய்கிறது என்பதை இந்த ஆய்வு வெளிப் படுத்தியுள்ளது.
  • புயல்களின் நகர்வு வேகமானது அரபிக்கடலில் குறைந்துள்ளது.
  • 1982-2019 ஆகிய ஆண்டுகளில், அரபிக் கடலில் உண்டான சூறாவளிப் புயல்கள் (CS) மற்றும் மிகக் கடுமையான சூறாவளிப் புயல்கள் (VSCS) ஆகியவற்றின் தீவிரம், அடிக்கடி உண்டாகக் கூடியத் தன்மை மற்றும் அதன் கால அளவு ஆகியவற்றில் குறிப்பிடத் தக்க அதிகரிப்புப் போக்கானது காணப்பட்டது.
  • அரபிக்கடலில் சமீபத்தியச் சகாப்தத்தில் உண்டாகும் (2001-2019) புயல்களின் அடிக்கடி உண்டாகக் கூடியத் தன்மையானது 52% அதிகரித்துள்ளது.
  • வங்கக் கடலில் இது 8 சதவீதம் குறைந்துள்ளது.
  • வங்காள விரிகுடாவில் வெப்பநிலையானது 30-32 டிகிரி செல்சியஸ் வரை உள்ளது.
  • அதிக வெப்பச் சலனத்தை அவை உட்கொணரச் செய்வதால் சூறாவளிப் புயல்களின் தீவிரமடைவதில் இந்த உயர் வெப்பநிலைகள் மிக முக்கியப் பங்கினை வகிக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்