இந்தியக் கடற்படையின் விமானப் படைப் பிரிவு 314 (ஐஎன்ஏஎஸ் 314) – ராப்டர்கள்
December 2 , 2019 2082 days 655 0
இந்திய கடற்படையின் வான்வெளிப் படைப் பிரிவு (Indian Naval Air Squadron – INAS) 314 என்ற ஆறாவது டோர்னியர் விமானப் படைப் பிரிவானது குஜராத் கடற்கரையில் உள்ள போர்பந்தர் கடற்படை வான்வெளிப் பிராந்தியத்தில் இணைக்கப்பட்டது.
ஐஎன்ஏஎஸ் 314 ஆனது இரை இனப் பறவைக் குடும்பத்திலிருந்து ராப்டர்கள் என்ற பெயரைப் பெற்றது.
இந்தப் படைப் பிரிவின் சின்னமானது பரந்து, விரிந்த நீல நிறக் கடலில் உலாவும் ‘ராப்டார் பறவையைச்’ சித்தரிக்கின்றது.
இந்தப் படைப் பிரிவானது பல செயல்பாடுகளைக் கொண்ட டோர்னியர் விமானத்தை இயக்க இருக்கின்றது. இது கான்பூரில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் என்ற நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது.