இந்தியக் கடலோர ரோந்து கப்பல் வஜ்ரா
March 27 , 2021
1563 days
717
- இந்தியக் கடலோர ரோந்து கப்பலான “வஜ்ரா” எனும் கப்பலானது சென்னையிலுள்ள காட்டுப்பள்ளியில் கடலோரக் காவற்படையில் இணைக்கப்பட்டது.
- 98 மீட்டர் நீளமுடைய இக்கப்பல் சென்னையின் காட்டுப்பள்ளியிலுள்ள M/S லார்சன் & டியூப்ரோ நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்டது.
- இக்கப்பலானது நவீன வசதிகளுடன் கூடிய இரட்டை எஞ்சின்களுடைய ஹெலிகாப்டரையும், நான்கு அதிவேகப் படகுகளை ஏந்திச் செல்லும் திறனுடன் அமைக்கப் பட்டுள்ளது.
- மேலும் இக்கப்பலை ஆய்வு மற்றும் மீட்புப் பணி, சட்ட அமலாக்கம் மற்றும் கடற்படை ரோந்துப் பணி ஆகியவற்றை மேற்கொள்ளவும் வேண்டி பயன்படுத்த இயலும்.
- மேலும் இக்கப்பல் கடலில் ஏற்படும் எண்ணெய்க் கசிவுகளைக் கையாளுவதற்கான மாசு கட்டுப்பாட்டு உபகரணத்தை ஏந்திச் செல்லும் திறன் பெற்றதாகும்.
Post Views:
717