இந்தியக் கடலோரக் காவல்படை தினம் 2026 - பிப்ரவரி 01
February 2 , 2026 210 days 262 0
இந்தியக் கடலோரக் காவல்படையின் வீரம், அர்ப்பணிப்பு மற்றும் சேவையைப் போற்றும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
இந்தியாவின் கடற்கரை, கடல்சார் பாதுகாப்பு மற்றும் கடல்சார் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் இந்தியக் கடலோரக் காவல்படையின் பங்கை அங்கீகரிப்பதே இதன் நோக்கமாகும்.
இந்தத் தினமானது, 1977 ஆம் ஆண்டு இந்தியக் கடலோரக் காவல்படை உருவாக்கப் பட்டதைக் குறிக்கிறது.
இந்தியக் கடலோரக் காவல்படையானது இந்தியாவின் பிராந்திய கடல் பகுதி மற்றும் பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்தைப் பாதுகாப்பதுடன் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது.