இந்தியக் கடற்படையின் அணுசக்தி, உயிரியல் மற்றும் வேதியியல் பயிற்சி வசதியானது (NBCTF - Nuclear, Biological and Chemical Training Facility) லோனவாலாவில் உள்ள ஐஎன்எஸ் சிவாஜியில் திறந்து வைக்கப்பட்டது.
NBCTF ஆனது அபிஹிதயா என்று சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றப்பட்டுள்ளது. அபிஹிதயா என்பது “ஊடுருவ இயலாத” என்ற பொருளைக் குறிக்கும்.
இது அணு ஆயுத, உயிரியல் மற்றும் வேதியியல் பொருட்களுக்கு எதிரான பாதுகாப்பு, அவற்றைக் கண்டறிதல் மற்றும் அவற்றைச் செயலிழக்கச் செய்தல் ஆகியவை குறித்து கடற்படைப் பணியாளர்களுக்கு நிகழ்நேரப் பயிற்சியை வழங்கவிருக்கிறது.
ஐ.என்.எஸ் சிவாஜி
ஐஎன்எஸ் சிவாஜி என்பது இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் லோனவாலாவில் அமைந்துள்ள இந்திய கடற்படை நிலையமாகும்.
இது கடற்படை மற்றும் இந்தியக் கடலோரக் காவற் படையின் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவதற்கான கடற்படை பொறியியல் கல்லூரியைக் கொண்டுள்ளது.
இது 1945 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி எச்எம்ஐஎஸ் சிவாஜியாக இணைக்கப்பட்டது.
ஐஎன்எஸ் சிவாஜியானது 2019-20 அன்று “1945 ஆம் ஆண்டு முதல் இந்தியக் கடற்படையை முன்னோக்கி எடுத்துச் செல்கிறது” என்ற கருத்துருவுடன் பிளாட்டின நினைவு வருடத்தை அனுசரிக்கிறது.