மத்தியக் கலாச்சார மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் இந்தியக் கலாச்சார இணைய தளத்தை புது தில்லியில் தொடங்கி வைத்தார்.
நாட்டின் பல்வேறு பாரம்பரியங்களைப் பற்றி இந்தியக் குடிமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த இணைய தளத்தின் முக்கிய நோக்கமாகும்.
இது ஆங்கிலம் மற்றும் இந்தி இரண்டு மொழிகளிலும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளமானது மத்தியக் கலாச்சாரத் துறை அமைச்சகத்தினால் முன்மொழியப்பட்டு, மும்பையில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது. இதில் உள்ள தரவுகள் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தினால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.