இந்தியக் கலை, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு கண்காட்சி (IAADB) 2023
December 12 , 2023 746 days 375 0
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் முதலாவது இந்திய கலை, கட்டிடக் கலை மற்றும் வடிவமைப்பு கண்காட்சியானது (IAADB) (2023) புது டெல்லியில் தொடங்கப் பட்டது.
கொல்கத்தா, டெல்லி, மும்பை, அகமதாபாத் மற்றும் வாரணாசி ஆகிய ஐந்து முக்கிய நகரங்களில் அருங்காட்சியகங்களைப் புத்துயிர் பெறச் செய்வதற்காகவும் கலாச்சார இடங்களை மேம்படுத்துவதற்காகவும் என்று மேற்கொள்ளப்படும் நாடு தழுவிய ஒரு பிரச்சாரத்துடன் இந்த முன்னெடுப்பு இணைக்கப்பட்டுள்ளது.
கொச்சி-முசிரிஸ் கண்காட்சியானது 2012 ஆம் ஆண்டில் கேரளாவில் நடைபெற்றது.
பீகார் அருங்காட்சியக கண்காட்சியானது 2021 ஆம் ஆண்டில் பாட்னாவில் தொடங்கப் பட்டது.