- இந்த கௌரவத்தைப் பெற்ற நாட்டின் 7வது காவல் துறையாக குஜராத் காவல்துறை உருவெடுத்துள்ளது.
- இந்தியத் துணைக் குடியரசுத் தலைவரான எம்.வெங்கையா நாயுடு குஜராத் காவல் துறைக்கு ‘குடியரசுத் தலைவரின் வண்ணங்கள்’ என்ற கௌரவத்தை வழங்கினார்.
- அணிவகுப்பு உள்ளிட்ட சிறப்பு விழாக்களின் போது குஜராத் காவல்துறையினர் தனது சீருடையின் இடது தோளில் குடியரசுத் தலைவரின் வண்ணத்தை (ஒரு சின்னம்) அணிவார்கள்.

குடியரசுத் தலைவரின் வண்ணங்கள் என்ற கௌரவம்
- சமூகத்திற்கு காவல்துறையினர் அளித்த மிகப்பெரிய பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக ஒரு காவல் துறைப் படையினருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த மரியாதை இதுவாகும்.
- குடியரசுத் தலைவரின் வண்ணங்கள் ‘நிஷான்’ என்றும் அழைக்கப் படுகின்றன.