TNPSC Thervupettagam

இந்தியக் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் எழுத்தறிவு

September 30 , 2025 4 days 36 0
  • இந்த அறிக்கையானது மத்திய மற்றும் மாநிலப் புள்ளி விவர அமைப்புகளின் 29வது மாநாட்டில் புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தினால் வெளியிடப் பட்டது.
  • 5 முதல் 9 வயது வரையிலான இந்தியக் குழந்தைகளில் சுமார் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகளில் அதிக அளவிலான ட்ரைகிளிசரைடு அளவுகள் உள்ளன.
  • மேற்கு வங்காளம் (67%), சிக்கிம் (64%), அசாம் (57%), நாகாலாந்து (55%) மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் (50%) ஆகிய பகுதிகளில் அதிக ட்ரைகிளிசரைடு பாதிப்பு காணப் படுகிறது.
  • அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, கேரளா (16.6%) மற்றும் மகாராஷ்டிரா (19.1%) ஆகிய மாநிலங்களில் மிகக் குறைந்த பாதிப்பு காணப்படுகிறது.
  • நாடு முழுவதும் 48% புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தைகளின் உயிரிழப்புகளுக்கு (முன் கூடிய பிரசவம்) குறைபிரசவம் மற்றும் பிறப்பின் போதான குறைந்த எடை காரணமாக அமைந்தது.
  • பிறக்கும் போதே ஏற்படும் மூச்சுத் திணறல் மற்றும் அதிர்ச்சி ஆகியவை 16% புதிதாக பிறந்தப் பச்சிளம் குழந்தைகளின் உயிரிழப்பிற்கும், அதே நேரத்தில் நிமோனியா 9% குழந்தைகளின் உயிரிழப்பிற்கும் பங்களித்தது.
  • இந்தியாவின் பதின்ம வயதினரில் சுமார் 5% பேர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப் பட்டுள்ளனர், டெல்லியில் அதிகபட்சமாகவும் (10%), அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம் (8.6%), மணிப்பூர் (8.3%) மற்றும் சத்தீஸ்கர் (7%) ஆகியவற்றில் அதிக பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
  • இந்தியாவில் சுமார் 16 சதவீதத்திற்கும் மேற்பட்ட இளம் பருவத்தினரில் அதிக ட்ரைகிளிசரைடு அளவு பதிவாகியுள்ளது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
  • குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கான தேசிய கல்வியறிவு விகிதம் 63.1% ஆகும் என்பதோடு இது ஏழு வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 73.1% ஆக உயர்ந்துள்ளது.
  • பல்வேறு வயதுக்குட்பட்ட சிறுவர்களிடையே கல்வியறிவு ஆனது 80 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது என்பதோடு சிறுமிகளில் சற்று குறைந்த விகிதங்களே இருந்தாலும் 81 சதவீதத்திற்கும் அதிகமாகவே இது பதிவாகியுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்