இந்தியச் சமத்துவமின்மை அறிக்கை 2022 - மின்னிலக்கத் தலைமுறை இடைவெளி
December 14 , 2022 869 days 499 0
ஆக்ஸ்பாம் இந்தியா நிறுவனமானது, 'இந்தியச் சமத்துவமின்மை அறிக்கை 2022: மின்னிலக்கத் தலைமுறை இடைவெளி' எனும் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில் கைபேசி வைத்திருக்கும் ஆண்களின் எண்ணிக்கையானது 61 சதவீதமாக உள்ள அதே சமயம் 31 சதவீத பெண்கள் மட்டுமே சொந்தமான தொலை பேசிகள் வைத்துள்ளனர்.
சாதி, மதம், பாலினம், வர்க்கம் மற்றும் புவியியல் இருப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் மின்னிலக்கப் பயன்பாடுகளிலும் கவலையளிக்கும் விதத்தில் காணப்படுகிறது.
சம்பளம் பெறும் நிரந்தரத் தொழிலாளர்களில் 95 சதவீதம் பேர் தொலைபேசி வைத்து இருக்கும் நிலையில் அவர்களின் வேலைவாய்ப்பு நிலையை அடிப்படையாகக் கொண்ட மின்னிலக்கத் தலைமுறை இடைவெளியினை இந்த அறிக்கை வெளிப் படுத்தியுள்ளது.
2021 ஆம் ஆண்டில் வேலையில்லாத 50 சதவீத நபர்களிடம் (வேலை தேடும்) மட்டுமே தொலைபேசி இருந்தது.
கிராமப்புற மக்களில் 3 சதவீதம் பேர் மட்டுமே கணினி வைத்திருக்கின்றனர்.
நாட்டில் 100 பேருக்கு 57.29 இணைய சந்தாதாரர்கள் மட்டுமே உள்ள நிலையில், அந்த எண்ணிக்கையானது நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் கணிசமான அளவில் குறைவாக உள்ளது.