அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (CSE) மற்றும் டவுன் டு எர்த் (DTE) இதழ் ஆனது 2025 ஆம் ஆண்டு இந்தியச் சுற்றுச்சூழல் நிலை குறித்த அறிக்கையினை வெளியிட்டு உள்ளது.
உண்மையில், 2024 ஆம் ஆண்டில் மிகச் சராசரியாக உலகத்தின் வெப்பநிலையானது தொழில்துறைக்கு முந்தைய சகாப்தத்தில் (1850-1900) பதிவான சராசரியை விட 1.60°C அதிகமாக பதிவானதுடன் இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக வெப்பமான ஆண்டாக இருந்தது.
முந்தைய ஒரு இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, 2024 ஆம் ஆண்டில் இந்தியா அவ்வப்போது மற்றும் தீவிரமான வானிலை நிகழ்வுகளை எதிர்கொண்டது.
2024 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், 274 நாட்களுள் 255 நாட்களில் இந்தியா தீவிர வானிலை நிகழ்வுகளை எதிர்கொண்டது ஆனால் 2023 ஆம் ஆண்டில் இதே ஒரு காலக் கட்டத்தில் 235 நாட்களும், 2022 ஆம் ஆண்டில் 241 நாட்களும் மிகக் கடுமையான வானிலை நிகழ்வுகளை எதிர்கொண்டன.
இந்த நிகழ்வுகள் ஆனது வேளாண்மையினைக் கடுமையாகப் பாதித்தன என்பதோடு 2024 ஆம் ஆண்டில் 3.2 மில்லியன் ஹெக்டேர் பயிர் நிலங்கள் பாதிக்கப் பட்டன என்ற ஒரு நிலையில் இது 2022 ஆம் ஆண்டில் இருந்ததை விட 74 சதவீதம் அதிகமாகும்.