இந்தியச் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் சங்கங்களின் கூட்டமைப்பானது 2035 ஆம் ஆண்டு குறிக்கோள் ஆவணத்தை வெளியிட்டுள்ளது.
2035 ஆம் ஆண்டிற்குள் இந்தியச் சுற்றுலாவை உலகமே விரும்பக் கூடியதாக மாற்றச் செய்வதற்கான இலக்குகள் மற்றும் அவற்றைச் செயல்படுத்தும் ஒரு பாதையை இது உள்ளடக்கியுள்ளது.
இந்தியச் சுதந்திரத்தின் 75வது ஆண்டு நிறைவை நினைவு கூரும் வகையில் இந்தக் குறிக்கோள் ஆவணமானது வெளியிடப் பட்டுள்ளது.
இது சுற்றுலாவை ‘இந்தியாவிற்கான சமூக-பொருளாதார ரீதியில் வேலை மற்றும் உள்கட்டமைப்பை உருவாக்கும் ஒரு துறையாகவும்’ 'நிலையான மற்றும் உள்ளார்ந்த சூழலமைவினை உருவாக்குவதற்கான ஒரு மாதிரியாகவும்' நிலை நிறுத்துவதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.