கணவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது பதிவான 498-A வழக்கை மும்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
மனைவியின் உடைகள் அல்லது சமையல் குறித்த கருத்துக்கள் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் (IPC) 498-A பிரிவின் கீழ் 'மோசமான கொடுமை' என்று கருதப்படாது.
இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 498-A ஆனது சிறு குடும்பத் தகராறுகளுக்கு அல்லாமல், மோசமான கொடுமைக்கான சான்றுகள் தேவை.
பிரிவு 498-A திருமணத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமையை எதிர்த்துப் போராடுவதற்காக 1983 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இது வரதட்சணை துன்புறுத்தல், உடல் மற்றும் மன ரீதியான சித்திரவதை மற்றும் ஒரு பெண்ணை தற்கொலைக்கு தூண்டுதல் அல்லது காயப்படுத்துதல் போன்ற செயல்களை உள்ளடக்கியது.
குடும்ப வன்முறையிலிருந்துப் பெண்களைப் பாதுகாப்பதையும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதையும் இந்தச் சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை மற்றும் அபராதம் ஆகியவற்றினை விதிக்கிறது.
இந்தப் பிரிவின் கீழான தண்டனை விகிதங்கள் பல குற்றங்களை விட அதிகமாக சுமார் 18% ஆகும்.