இந்தியத் தரவுத் தொடர்பு செயற்கைக்கோள் அமைப்பு (Indian Data Relay Satellite System - IDRSS) என்ற ஒரு புதிய செயற்கைக் கோள் தொடரை அமைப்பதன் மூலம் விண்வெளியில் இருந்து விண்வெளியில் உள்ளவற்றைக் கண்காணித்தல் மற்றும் இந்தியாவின் விண்வெளிச் சொத்துக்களைத் தொடர்பு கொள்ளுதல் ஆகிய செயல்களுக்கு இந்தியா திட்டமிட்டுள்ளது.
இது மற்ற இந்திய செயற்கைக் கோள்களிடம் உள்ள தகவல்களைக் கண்காணிக்கும், அனுப்பும் மற்றும் அவற்றைப் பெறும் பணியை மேற்கொள்ளும் செயற்கைக் கோள்களின் ஒரு தொகுப்பாகும்.
2,000 கிலோ எடை கொண்ட IDRSS செயற்கைக் கோள்கள் ஜிஎஸ்எல்வி விண்கலத்தின் மூலம் 36,000 கி.மீ உயரத்தில் உள்ள புவிசார் சுற்றுவட்டப் பாதையில் செலுத்தப்பட இருக்கின்றன.
2022 ஆம் ஆண்டில் செலுத்தப்பட இருக்கும் ககன்யான் திட்டத்தில் உள்ள உறுப்பினர்கள் இதன் முதல் பயனாளிகளாக இருப்பர். இவர்கள் தங்கள் பயணம் முழுவதும் திட்டக் கட்டுப்பாட்டகத்துடன் முழுமையாகவும் தொடர்ச்சியாகவும் தொடர்பு கொள்ள முடியும்.