இந்தியத் திபெத்திய எல்லைக் காவல் படை எழுச்சி தினம் - அக்டோபர் 24
October 28 , 2022 1027 days 416 0
இந்தியா-சீனா போரின் போது, 1962 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதியன்று இந்திய திபெத்திய எல்லை காவல் படை நிறுவப்பட்டது.
உயரமான பகுதியில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் நிபுணத்துவம் பெற்ற வகையில் இது ஒரு எல்லைக் காவல் படையாகும்.
தற்போது, லடாக்கின் காரகோரம் கணவாய் முதல் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஜசெப் லா வரையிலான 3488 கிமீ நீள இந்திய-சீனா எல்லையை உள்ளடக்கிய எல்லைப் பாதுகாப்புப் பணிகளில் இந்திய திபெத்திய எல்லைக் காவல் படை நிலை நிறுத்தப் பட்டுள்ளது.
இந்திய திபெத்திய எல்லைக் காவல் படையானது, ஆரம்பத்தில் 1949 ஆம் ஆண்டு மத்திய சேமக் காவல் படை (CRPF) சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது.
இருப்பினும், 1992 ஆம் ஆண்டில் பாராளுமன்றம் மத்திய சேமக் காவல் படை சட்டத்தை இயற்றியதோடு, அதற்கான விதிகளை 1994 ஆம் ஆண்டில் உருவாக்கியது.