இந்த அறிக்கையை கல்வி சோதனை சேவை (ETS) அமைப்பானது, இந்திய தொழில் துறை கூட்டமைப்பு (CII), AICTE, இந்தியப் பல்கலைக்கழகங்களின் சங்கம் (AIU) மற்றும் Taggd ஆகியவற்றுடன் இணைந்து வெளியிட்டது.
2026 ஆம் ஆண்டு இந்தியத் திறன் அறிக்கையில், இந்தியாவின் வேலைவாய்ப்பு வழங்கல் திறன் ஆனது கடந்த ஆண்டு இருந்த 54.81 சதவீதத்திலிருந்து தற்போது 56.35% ஆக அதிகரித்துள்ளது.
உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகியவை 2026 ஆம் ஆண்டிற்கான மிக அதிக வேலைவாய்ப்பு வழங்கல் நிலைகளைக் கொண்டுள்ளன.
உலகளாவிய செயற்கை நுண்ணறிவு (AI) திறமை கொண்ட நிபுணத்துவத்தில் இந்தியா 16% பங்கைக் கொண்டுள்ளது என்பதோடுஇது 2027 ஆம் ஆண்டிற்குள் 1.25 மில்லியன் நிபுணர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.