இந்தியத் துணைக்கண்டப் பிரிவினை பற்றிய இந்தியாவின் முதல் அருங்காட்சியகம்
August 25 , 2017 2938 days 1205 0
எழுபது ஆண்டுகளுக்குப் பின்னர், பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸில் உள்ள டவுன்ஹால் கட்டடத்தில் இந்தியத் துணைக்கண்டப் பிரிவினை பற்றிய இந்தியாவின் முதல் அருங்காட்சியகம் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது.
பிரிவினையின்போது பாதிப்பிலிருந்து மீண்டவர்களது கதைகளையும் நினைவலைகளையும் வெளியுலகுக்கு பறைசாற்றக்கூடிய ஒன்றாய் இது அமைக்கப்பட இருக்கிறது.
இந்த அருங்காட்சியகத்தின் மூலமாக, எவ்வாறு காலனியாதிக்கத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான போராட்டம் மிகவும் கொடூரமான வன்முறைப் பாதையினை தழுவியது என்ற கதையினை அறிந்து கொள்ள இயலும்.
பிரிவினையின் போது வெளிவந்த செய்தித்தாள்களின் செய்திக் கட்டுரைகள் இங்கு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட இருக்கிறது.
இந்தியப்பிரிவினை (Partition of India)
இது 1947 ல் பிரிட்டிஷ் இந்தியாவை இந்தியா என்றும் பாகிஸ்தான் என்றும் பிரிக்கப்பட்டதைக் குறிக்கிறது.
இந்தியத் துணைக் கண்டத்தில் பிரிட்டிஷ் இந்தியாவின் ஆட்சி முடிவுற்றதன் ஒரு பகுதியாக இந்தப் பிரிவினை கருதப்படுகிறது.
சர் சையது அகமதுகான் முன்வைத்த இருதேசக் கொள்கையே (Two Nation Theory) இந்தியப் பிரிவினையின் முக்கியக் காரணமாகும்.
இந்தப் பிரிவினையின் முதன்மை பரப்பாளராகச் செயல்பட்டவர் ஜின்னர் ஆவார். பின்னர் பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரல் பதவி வகித்தார்.
இந்தப் பிரிவினையின் போது இரு நாடுகளுக்கிடையேயும் புதிதாக உருவாக்கப்பட்ட ராட்கிளிஃப் எல்லைக்கோட்டினை பல லட்சக்கணக்கான மக்கள் கடந்து இரு நாடுகளுக்கும் இடையே சென்றனர்.