இந்தியத் தேசியக் கொடியினை ஏந்தி அணியை வழி நடத்தும் வீரர்கள்
July 8 , 2021 1500 days 680 0
ஆறுமுறை உலக குத்துச்சண்டை சாம்பியன்சிப் பட்டம் வென்ற MC மேரி கோம் மற்றும் ஆடவர் ஹாக்கி அணித் தலைவர் மன்பிரீத் சிங் ஆகியோர் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் இந்தியாவின் தேசியக் கொடியைச் சுமந்து அணியை வழி நடத்த உள்ளனர்.
ஆகஸ்ட் 08 அன்று நடைபெறும் நிறைவு விழாவில், 2018 ஆம் ஆண்டு உலக மல்யுத்த சாம்பியன்சிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பஜ்ரங் பூனியா தேசியக் கொடியைச் சுமந்து அணியை வழி நடத்துவார்.
“பாலினச் சமத்துவத்தை” உறுதி செய்வதற்காக முதன்முறையாக ஒரு ஆண் மற்றும் ஒருபெண் உள்ளிட்ட இருவரை தேசியக் கொடியினைச் சுமந்து அணியினை வழி நடத்தச் செய்து, வரவிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய அணி பங்கேற்க உள்ளது.