இந்தியத் தேசியச் சின்னம் குறித்து உள்துறை அமைச்சகம்
February 8 , 2025 344 days 268 0
மத்திய உள்துறை அமைச்சகம் ஆனது, இந்தியத் தேசியச் சின்னத்தின் ஒரு தவறானப் பயன்பாடு மற்றும் முறையற்ற சித்தரிப்பினைத் தடுப்பதற்கு வேண்டி நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளிடம் கோரியுள்ளது.
தேவநாகரி எழுத்து வடிவில் எழுதப் பட்ட சத்யமேவ ஜெயதே என்ற அந்த முழக்கம் இல்லாமல் நான்முக சிங்கத் ஸ்தூபி முத்திரை முழுமையடையாது என்பதை இது மிக வலியுறுத்துகிறது.
2005 ஆம் ஆண்டு இந்தியத் தேசியச் சின்னம் (முறையற்றப் பயன்பாட்டைத் தடை செய்தல்) சட்டத்தின் அட்டவணையின் I & IIவது பின் இணைப்புகளில் குறிப்பிடப் பட்டு ள்ள வடிவமைப்பிற்கு இணங்க இந்த வடிவமைப்பு இருக்க வேண்டும்.
இந்தச் சின்னம் ஆனது, மையத்தில் ஒரு தர்மச் சக்கரம், வலதுபுறத்தில் ஒரு காளை, இடது புறத்தில் ஒரு பாய்ந்து செல்லும் குதிரை மற்றும் கடைசி வலது மற்றும் இடது புறத்தில் தர்ம சக்கரங்களின் வெளிவரம்புகள் காணப்படுகின்ற விவரங்கள் கொண்ட பீடத்தில் மூன்று சிங்கங்கள் அமர்ந்திருக்கும் வகையிலான ஸ்தூபியைக் கொண்டு உள்ளது.
மேலும், 'சத்யமேவ ஜெயதே' என்ற முழக்கம் ஆனது சிங்கத் தூபியின் வடிவத்திற்கு கீழே தேவநாகரி எழுத்து வடிவில் எழுதப்பட்டுள்ளது.