இந்தியத் தொல்லியல் துறையின் கீழ் கபிலேஸ்வரர் ஆலயம்
May 21 , 2023 734 days 375 0
ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள கபிலேஸ்வரர் ஆலயம் ஆனது, இந்தியத் தொல்லியல் துறையின் (ASI) பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளது.
இந்த முடிவானது ஆலயக் கட்டமைப்பின் சிறந்தப் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
5 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்த மிகப் பழமையான கபிலேஸ்வரர் ஆலயமானது, 14 ஆம் நூற்றாண்டில் கஜபதி கபிலேந்திர தேவ் என்பவரால் புதுப்பிக்கப் பட்டது.
கபிலேஸ்வரர் ஆலயமானது கலிங்கக் கட்டிடக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.