விஸ்வாஸ் படேல், 2022 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக இந்தியப் பண வழங்கீட்டுச் சபையின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் இதற்கு முன்னதாக 2018 ஆம் ஆண்டில் இந்தச் சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.
2013 ஆம் ஆண்டில், இவர் இச்சபையின் இணைத் தலைவராக பணியாற்றினார்.
இந்தியப் பணவழங்கீட்டுச் சபை என்பது ஒரு கட்டணச் சூழல் தொழில்துறை அமைப்பு ஆகும்.
மேலும், இது இந்தியாவின் இணையம் மற்றும் கைபேசி சங்கத்தின் ஓர் அங்கமாகும்.
இந்தியப் பணவழங்கீட்டுச் சபை, பணமில்லாத பரிவர்த்தனைச் சமூகத்தை மேம்படுத்துவதையும், இந்தியாவில் டிஜிட்டல் எண்ணிமக் கட்டணத்தை மேம்படுத்தச் செய்வதற்கான குறிக்கோளினையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.