இந்தியப் பருத்திக்கான முதல் நிறுவன அடையாளம் மற்றும் சின்னம்
October 12 , 2020 1767 days 670 0
மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அவர்கள் இரண்டாம் உலகப் பருத்தி தினத்தன்று இந்தியப் பருத்திக்கான முதல் நிறுவன அடையாளம் மற்றும் சின்னத்தை அறிமுகப் படுத்தியுள்ளார்.
இனி இந்தியாவின் உயர்வகைப் பருத்தியானது உலகப் பருத்தி வர்த்தகத்தில் ‘கஸ்தூரிப் பருத்தி’ என்று அழைக்கப்படும்.
கஸ்தூரிப் பருத்தியானது வெண்மை, பிரகாசம், மென்மை, தூய்மை, மிளிர்வு, தனித்துவம் மற்றும் இந்தியத் தன்மை ஆகியவற்றை முன்னிறுத்தும்.
இந்தியாவானது பருத்தி உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் உள்ளது மற்றும் உலகில் மிகப்பெரிய பருத்தி நுகர்வோர் நாடாகவும் உள்ளது.