இந்தியப் பாதுகாப்பு புத்தாக்க நிறுவன சவால் – 5வது பதிப்பு
August 23 , 2021 1589 days 665 0
இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் இந்தியப் பாதுகாப்பு தொடக்க நிறுவன சவாலின் (Defence India Start-up Challenge – DISC) 5வது பதிப்பினைத் தொடங்கி வைத்தார்.
DISC ஆனது பாதுகாப்புப் புத்தாக்க அமைப்பின் சிறப்பான பாதுகாப்பு சேவைக்கான புத்தாக்கங்கள் எனும் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டது.
இந்தச் சவாலானது பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறையில் தன்னிறைவு அடைவதற்கும், அவற்றில் புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டினை ஊக்குவிப்பதற்குமானதாகும்.
இந்த சவாலானது அடல் புத்தாக்க திட்டத்துடன் இணைந்து பாதுகாப்பு அமைச்சகத்தினால் தொடங்கப் பட்டதாகும்.
தேசிய ராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் முன்மாதிரிகளை உருவாக்கவும் (அ) தயாரிப்புப் பொருட்கள் மற்றும் தீர்வுகளை வணிகமயமாக்கவும் வேண்டி தொடக்க நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் புத்தாக்க நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு ஆதரவு வழங்கும் நோக்கத்தோடு இது தொடங்கப் பட்டது.