மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி இந்தியப் பாலங்களுக்கான மேலாண்மை அமைப்பை (IBMS - Indian Bridge Management System) தொடங்கி வைத்தார்.
IBMS ஆனது நாட்டில் உள்ள அனைத்து பாலங்களின் பட்டியலை உருவாக்கவும் பாலங்களின் கட்டமைப்பு நிலைகளை மதிப்பிடுவதற்காகவும் மேம்படுத்தப்படுகிறது.
IBMS ஆனது ஒரே உரிமையாளரால் நிர்வகிக்கப்படும் உலகின் மிகப்பெரிய தளமாகும். இது 1,50,000ற்கும் மேற்பட்ட பாலங்களுடைய கட்டமைப்புகளின் தகவல்களைக் கொண்டிருக்கும்.
இந்த பட்டியல் தயாரிப்பின் போது ஒவ்வொரு பாலத்திற்கும் குறிப்பிட்ட மாநிலம், சாலைப் போக்குவரத்து அலுவலக மண்டலம், தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை அல்லது மாவட்ட சாலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு தனித்துவ அடையாள எண் அல்லது தேசிய அடையாள எண் வழங்கப்படும்.
புவியிடங்காட்டியின் (GPS) மூலம் அட்சரேகை மற்றும் தீர்க்க ரேகை ஆகியவற்றின் அடிப்படையில் பாலங்களின் இடம் கண்டறியப்பட்டு, பாலங்களுக்கு பால இருப்பிட எண் வழங்கப்படும்.