பிறப்பின் போதான அனைத்து இந்தியப் பாலின விகிதம் 2015-16 ஆம் ஆண்டிலிருந்து 8 புள்ளிகள் அதிகரித்துள்ளன. 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை 1000 ஆண்களுக்கு 931 பெண் குழந்தைகளாக இந்த விகிதம் அதிகரித்துள்ளது.
இந்த விகிதமானது 2015-16 கால கட்டத்தில் 923 பெண்களாகவும், 2016-17 கால கட்டத்தில் 926 பெண்களாகவும், 2017-18 காலகட்டத்தில் 929 பெண்களாகவும் இருந்தது.
கேரளா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் 1000 ஆண்களுக்கு 959 பெண்களுடன் முதலிடத்தில் உள்ளன. இதற்கு அடுத்த இடங்களில் மிசோரம் (958) மற்றும் கோவா (954) ஆகிய மாநிலங்கள் உள்ளன.
இந்தப் பட்டியலின் கடைசி இடங்களில் டாமன் & டையூ (889) லட்சத் தீவுகள் (891) மற்றும் பஞ்சாப் (900) ஆகிய மாநிலங்கள் உள்ளன.
பாலின விகிதம் என்பது 1000 ஆண்களின் எண்ணிக்கைக்கு எவ்வளவு பெண்கள் உள்ளனர் என்பதைக் குறிக்கின்றது.