இந்தியப் பிரதமரின் பிரேசில் பயணத்தின் போது, அந்நாட்டின் மிக உயரிய குடிமை விருதான கிராண்ட் காலர் ஆஃப் தி நேஷனல் ஆர்டர் ஆஃப் தி சதர்ன் கிராஸ் விருது வழங்கப் பட்டது.
மேலும், இந்த வருகையின் போது இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் ஆறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
அவை பாதுகாப்பு, எண்ணிம உள்கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வேளாண் துறை மற்றும் அறிவுசார் சொத்து ஆகியவற்றில் ஒத்துழைப்பை உள்ளடக்கியது.
இரு நாடுகளும் ஐந்து ஆண்டுகளுக்குள் (2030) 20 பில்லியன் டாலர் மதிப்பிலான இரு தரப்பு வர்த்தக இலக்கை நிர்ணயித்துள்ளன.