2020-21 ஆம் ஆண்டின் இந்தியப் புலம்பெயர்வு அறிக்கையானது சமீபத்தில் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகத்தினால் வெளியிடப்பட்டது.
பெருந்தொற்றானது நகர்ப்புற இந்தியாவில் இருந்து 51.6 சதவீத ஆண்களைக் கிராமப் புறத்தில் உள்ள தங்களது வீடுகளுக்கு இடம்பெயர கட்டாயப்படுத்தியுள்ளன.
கிராமத்திலிருந்துக் கிராமத்திற்குப் புலம்பெயரும் ஆண்களின் இடம்பெயர்வு அளவு என்பது 44.6 சதவீதமாக உள்ளது.
திருமணத்திற்குப் பிறகு பெண்கள் தங்கள் கணவர் வீட்டிற்கு இடம் பெயர்வதால் கிராமப் புறங்களில் இருந்து கிராமப்புறங்களுக்கு புலம்பெயரும் பெண்களின் இடம் பெயர்வு அளவானது 88.8 சதவீதமாக உள்ளது.
மற்ற நாடுகளில் இருந்து கிராமப்புறங்களுக்குப் புலம்பெயரும் ஆண்களின் எண்ணிக்கையானது நகர்ப்புறங்களில் உள்ள 2.3 சதவீதத்திற்கு மாற்றாக 3.9% ஆக இருந்தது.
கிராமப்புற இடம்பெயர்வு விகிதம் ஆனது 6.5 சதவீதமாகவும், நகர்ப்புற இடம்பெயர்வு விகிதம் ஆனது 34.9 சதவீதமாகவும் உள்ளது.